டெஸ்லாவை வெறுக்கும் ஜேர்மானியர்கள்., 94 சதவீதம் பேர் வாங்க மறுப்பு
ஜேர்மனியில் நடத்தப்பட்ட ஒரு சமீபத்திய கருத்துக் கணிப்பில் 94% பேர் இனி டெஸ்லா கார்களை வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் ஏற்கனவே ஈரோப்பிய சந்தையில் விற்பனை குறைந்திருக்கும் டெஸ்லாவுக்கு இன்னும் பெரிய பிரச்சனை உருவாகியுள்ளது.
விற்பனை குறைவு - ஒரு எச்சரிக்கை சிக்னல்
2024ல், ஜேர்மனியில் டெஸ்லா விற்பனை 41% குறைந்துள்ளது. அதே நேரத்தில், மின்சார கார்கள் சந்தையில் 27% வளர்ச்சி கண்டுள்ளது. இது ஏற்கனவே ஜேர்மனியில் டெஸ்லாவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஆனால் 2025-ல் நிலைமையோ இன்னும் மோசம். பொதுவாக விற்பனை 70 சதவீதம் குறைந்துள்ளது, இது 2024-ஐ விடவே மோசமான தரத்தில் உள்ளது.
ஏன் மக்கள் டெஸ்லாவை புறக்கணிக்கின்றனர்?
- EV போட்டி அதிகரிப்பு - புதிய மாடல்கள் அதிகமாக அறிமுகமாகி வருகின்றன.
- Model Y மாற்றம் - புதிய மாடல் வெளியீடு தாமதமாகியுள்ளது.
- எலோன் மஸ்கின் அரசியல் செயல்கள் - அவர் ஜேர்மானிய அரசியலில் தலையிடுவது மற்றும் வலதுசாரி AfD கட்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது, மக்களை கோபமடைய வைத்துள்ளது.
- நாசி ஆதரவு குற்றச்சாட்டு - மஸ்கின் சில கருத்துக்கள் மற்றும் Trump-இன் பதவியேற்பு விழாவில் "Seig Heil" சைகை காட்டிய புகைப்படங்கள் பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளன.
டெஸ்லாவுக்கு ஜேர்மானியர்களின் பதில்
T-Online செய்தி நிறுவனத்தின் நடத்திய 100,000 பேர் பங்கேற்ற கருத்துக் கணிப்பில், மிகுந்த எதிர்வினை வெளிப்பட்டுள்ளது:
94 சதவீதம் பேர் இனிமேல் டெஸ்லா வாங்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
இது ஜேர்மனியர்கள் டெஸ்லாவை முற்றிலும் புறக்கணிக்கிறார்கள் என்பதற்கான உறுதியான சான்றாகும்.
டெஸ்லாவின் எதிர்காலம்?
இந்நிலையில், Model Y புதிய வடிவம் விற்பனையை மீண்டும் உயரும் என்று சில பங்குதாரர்கள் நம்பினாலும், இவ்வளவு பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் டெஸ்லா வளர்ச்சி சந்தேகமாக உள்ளது.
ஜேர்மனியில் டெஸ்லா தனது நடவடிக்கைகளை குறைக்க நேரிடும் என தொழில்நுட்ப விமர்சகர்கள் கருதுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |