மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்திலுள்ள இந்தோரில், உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தது.
குழந்தை உயிரிழந்த நிலையில், உடற்கூறு ஆய்வுக்குப் பின் குழந்தையின் உடல் அதன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
குழந்தையை அடக்கம் செய்வதற்காக குழந்தையை சுற்றியிருந்த பிளாஸ்டிக் பையை பெற்றோர் அகற்ற, அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
ஆம், குழந்தையின் ஒரு கையிலுள்ள நான்கு விரல்களைக் காணவில்லை. குழந்தையை லேசாக எலி கடித்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்திருந்த நிலையில், எலி கடித்துதான் குழந்தை உயிரிழந்திருக்கக்கூடும் என்றும், உண்மையை மருத்துவமனை ஊழியர்கள் மறைத்துவிட்டதாகவும் குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
சம்பந்தப்பட்ட ஊழியர்களையும் மருத்துவமனை கண்காணிப்பாளரையும் பணியிடைநீக்கம் செய்யவேண்டும் என கோரியுள்ள குழந்தையின் உறவினர்கள், இலையென்றால், போராட்டம் நடத்த இருப்பதாக எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில், கடந்த இரண்டு மாதங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் எலிக்கடிக்கு ஆளாகி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |