அட்டைப் பெட்டியில் கைவிடப்பட்ட பிஞ்சுக் குழந்தை: விட்டுச் சென்றவருக்கு பொலிஸார் வலைவீச்சு
பிலிப்பைன்ஸில் பிறந்த பிஞ்சு குழந்தை அட்டைப் பெட்டியில் வைத்து கைவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை
பிலிப்பைன்ஸின் டகியூகாராவ் நகரில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பிஞ்சு குழந்தை ஒன்று அட்டைப் பெட்டியில் வைத்து சாலையோரம் கைவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 24ம் திகதி புதன்கிழமை அதிகாலை 6:50 மணியளவில் வழிப்போக்கர் ஒருவர் பெட்டியை கவனித்த போது அதில் பச்சிளம் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை தீவிரம்
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் குழந்தையை கைவிட்டு சென்ற நபரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பேஸ்புக் பக்கத்தில் இந்த சம்பவத்தை பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |