திருமண விழாவில் விருந்து சாப்பிட்டவர்களுக்கு இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி! என்ன தெரியுமா?
திருமணத்தில் விருந்து சாப்பிடுபவர்கள் 99 அமெரிக்க டாலர் வழங்க வேண்டும் என்று தம்பதி போட்ட புதிய கண்டிஷன் பயங்கர வைரலாகி வருகின்றது.
திருமண வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு விருந்து வழங்கும் வழக்கம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் தற்போது நடக்கும் திருமணங்களை வித்தியாசமாக முறையில் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்துசோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் எனக்கு எனது தோழியின் திருமணத்திற்காக அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் திருமணத்திற்கு வழங்கப்படும் விருந்திற்கு விருந்தினர்களாக வருபவர்கள் 99 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ7300) வழங்க வேண்டும்.
அப்பொது தான் திருமண விருந்தில் கலந்து கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுருந்தது. என் தோழி அவர் திருமணம் செய்யப்போகும் நபருடன் ஏற்கனவே உறவிலிருந்து 3 குழந்தைகளை பெற்ற நிலையில் தற்போது திருமணம் செய்கிறார்.
இதனால் ஹனிமூன் செல்ல தேவைப்படாது என்பதால் இது போன்ற புது யுக்தியை பின்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.