அவுஸ்திரேலியாவில் புதிய இரண்டு உயிரினங்கள் கண்டுபிடிப்பு: காத்திருந்த ஆச்சரியங்கள்
அவுஸ்திரேலியாவில் இரண்டு புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு
அவுஸ்திரேலியாவின் ஆழ்கடல் பகுதியில் இருந்து அந்நாட்டு விஞ்ஞானிகள் இரண்டு புதிய உயிரினங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அவுஸ்திரேலிய விஞ்ஞானிகளின் இந்த ஆராய்ச்சியில், புதிய ஒளி ஊடுருவ கூடிய நண்டு(semi-transparent Porcelain crab) இனமும், ஒளிரும் லாந்தர் சுறா மீன்(glowing lantern shark) இனமும் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் CSIRO- ஆராய்ச்சியாளர்கள் 2022ம் ஆண்டு தொடங்கிய கடல் ஆராய்ச்சி பயணத்தின் போது இந்த புதிய இரண்டு உயிரினங்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் குழுவின் இந்த ஆராய்ச்சியானது, அவுஸ்திரேலிய கடற்கரையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள காஸ்கோய்ன் கடல் பூங்கா வரை நடைபெற்றது.
லாந்தர் சுறா(lantern shark)
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த மேற்கு அவுஸ்திரேலிய லாந்தர் சுறா, சுமார் 40 சென்டிமீட்டர் நீளம் வளரக்கூடியது.
இவை கடலின் மேற்பரப்பில் இருந்து சுமார் 600 மீட்டருக்கு கீழ் காணப்படுகின்றன.
இந்த மீன்களின் சிறப்பம்சம் அதன் ஒளிரும் திறன் ஆகும், இவற்றின் வயிறு மற்றும் பக்கவாட்டில் காணப்படும் போட்டோபோர்களே இந்த ஒளிரும் திறனுக்கு காரணமாகும்.
பீங்கான் நண்டுகள்(Porcelain crab)
கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு உயிரினம் புதிய பீங்கான் நண்டுகள்(Porcelain crab) ஆகும்.
இவை சுமார் 1.5 செ.மீ அளவு கொண்ட சிறிய ஓட்டுடைய உயிரினம் ஆகும்.
ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட இந்த நண்டு, உணவுகளை பிடிக்க தன்னுடைய கொடுக்குகளை பயன்படுத்தாமல் தங்களுடைய முடிகளை பயன்படுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |