இது 1000 ஆண்டுகள் பழமையான ஏலியன் உடல் இல்லை: ஆய்வில் தெரியவந்த பகீர் உண்மை
சமீபத்தில் சர்ச்சையை கிளப்பிய 1000 ஆண்டுகள் பழமையான ஏலியன் உடல்கள் சமீபத்தில் தயாரிக்கப்பட்டவை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்ச்சையை கிளப்பிய ஏலியன் உடல்
மெக்சிகோவில் சமீபத்தில் காங்கிரஸ் பிரதிநிதிகள் சபையில் எம்.பிக்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் ஊடகவியலாளரும், ஏலியன்கள் தொடர்பான ஆர்வலருமான ஜெய்ம் மௌசன் 1000 ஆண்டுகள் பழமையான ஏலியன் உடலங்கள் கிடைக்கப் பெற்று இருப்பதாக அறிவித்தார்.
ஏற்கனவே உலகம் முழுவதும் ஏலியன் மற்றும் அவர்கள் பயணிக்கும் பறக்கும் தட்டுகள் குறித்த செய்திகள் அடிக்கடி உலா வந்து கொண்டு இருக்கும் போது, ஜெய்ம் மௌசனின் அறிவிப்பு பெரும் கவனத்தை பெறத் தொடங்கியது.
பெரிய பின் தலை பகுதி, கையில் 3 விரல்கள், மற்றும் அளவில் சிறிய உடல், அத்துடன் இவை கார்பன் பரிசோதனையில் 1000 ஆண்டுகள் பழமையானவை என ஜெய்ம் மௌசன் வழங்கிய விளக்கம் ஆகியவற்றை தொடர்ந்து இது சர்வதேச நாடுகளின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.
மேலும் இந்த ஏலியன் உடல்களில் முட்டைகள் இருந்தாகவும் மெளசன் தெரிவித்தார். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இதுப்போன்று ஏலியன் உடலம் என்ற பெயரில் சமர்பித்தவை மம்மியாக்கப்பட்ட மனித குழந்தையின் உடல் என்று நிராகரிக்கப்பட்டது.
வெளிச்சத்திற்கு வந்த உண்மை
இந்நிலையில் பெரும் சர்ச்சையை உருவாக்கிய மெளசன் சமர்பித்த ஏலியன் உடலங்கள் சமீபத்தில் தயாரிக்கப்பட்டவை என்று ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளிலும் சமர்பிக்கப்பட்ட ஏலியன் உடலங்கள் தேர்ச்சி பெற்றுள்ளது.
இந்த போலி மனித உடலங்கள் விலங்குகள் மற்றும் மனிதர்களின் எலும்புகள் இணைந்த செயற்கை பசையுடன் உருவாக்கப்பட்ட உடலங்கள் என தெரியவந்துள்ளது.
தாவர இலைகள் மற்றும் செயற்கை பசைகள் ஆகியவை எலும்பு தோலை உருவகப்படுத்துவதற்காக பயன்படுத்த படுத்தப்பட்டு உடலங்கள் மூடப்பட்டு இருப்பதாக பெருவின் சட்ட மருத்துவம் மற்றும் தடய அறிவியல் கழகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |