பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையரை காப்பாற்ற முயன்ற நபர்! வெளியான புதிய காட்சி (Warning Video)
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில், புதிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் Sialkot நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில், மேலாளராக பணியாற்றி வந்த இலங்கையின் கொழும்புவைச் சேர்ந்த என்பவர் அங்கிருக்கும் சக ஊழியர்களால் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்டார்.
Priyantha diyawadana, அவர்களின் மதத்தலைவரான Muhammad ibn Abdullah-வின் பெயர் கொண்ட சுவரொட்டிகளை இழிவு படுத்தியதன் காரணமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் நிச்சயமாக சட்டத்திற்கு முன் தண்டிக்கப்படுவர் என்று கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது புதிய வீடியோ ஒன்றை பிரபல ஆங்கில ஊடகம் Dawn.com வெளியிட்டுள்ளது.
அதில், தொழிற்சாலை இயந்திரங்களில் உள்ள குறிப்பிட்ட சுவரொட்டிகளை அகற்றும் படி அங்கிருந்த தொழிலாளர்களிடம் Priyantha diyawadana கூறியுள்ளார். இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் கடும் ஆத்திரமடைந்து, முதலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் அங்கிருக்கும் உள்ளூர் மக்களும் சேர்ந்ததால், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கூடியதைக் கண்டு Priyantha diyawadana அங்கிருந்த கூரைக்கு தப்பி ஓடியுள்ளார்.
உள்ளே இருந்த ஊழியர் ஒருவர் Priyantha diyawadana-வை அவர்களிடம் இருந்து பாதுகாக்க முயன்றுள்ளார். ஆனால் அந்த கும்பலில் இருந்த அவர்கள், இன்று இவரால் தப்பிக்க முடியாது என்று கூச்சலிட்டுள்ளனர்.
மீண்டும் அந்த நபர், Priyantha diyawadana-வின் உடலை பாதுகாக்க முயன்றுள்ளார். இதைக் கண்ட அந்த கும்பல், சக ஊழியரை தாக்கி, பின்னர் இலங்கையரை சாலைக்கு இழுத்து சென்று உடைத்து, கற்கள் மற்றும் இரும்பு கம்பியால் சித்ரவதை செய்து, அவரை துடி துடிக்க கொன்றுள்ளனர்.
அதன் பின் அவரது உடலுக்கு தீ வைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017