களைக்கட்டும் ஐபிஎல் திருவிழா: புதிய விதிகள் மற்றும் நடைமுறைகள் என்னென்ன?
புதிய அணிகள், புதிய விதிமுறைகள் என பல புதிய தோற்றத்துடன் 2022ம் ஆண்டுக்கான 15வது சீசன் ஐபிஎல் போட்டிகள் கடந்த சனிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
உலகத்தின் மிக அதிக பணம் புரளும் கிரிக்கெட் தொடராக கருதப்படும் ஐபிஎல் போட்டிகளின் 15வது சீசன் சனிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
கடந்த சீசன் வரை ஐபிஎல்-லில் 8 அணிகளே இருந்த நிலையில், தற்போது லக்னோ மற்றும் குஜராத் போன்ற இரண்டு அணிகள் புதிதாக இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகளுடன் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன.
புதிய அணிகள் மற்றும் அணிகளின் புதிய கேப்டன்கள்:
இதுவரை எட்டு அணிகள் ஐபிஎல் போட்டியில் பங்குபெற்ற நிலையில், இந்த ஆண்டு கே.எல் ராகுல் தலைமையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் என்ற இரண்டு புதிய அணிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஐபிஎல் அணிகளை பொறுத்தவரை பெரும்பாலான அணிகள் தங்கள் கேப்டனை மாற்றி உள்ளனர், அந்தவகை இந்த ஆண்டு மட்டும் பெங்களூரு, சென்னை, கொல்கத்தா லக்னோ குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் தங்களின் கேப்டன்களை மாற்றியுள்ளனர்.
புதிய வழிமுறைகள்:
எப்போதும் 8 அணிகளுடன் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு 10 அணிகளுடன் நடைபெற உள்ளதால் இந்த ஆண்டு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்ட உள்ளது.
குழு 1:
மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
குழு 2:
சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ்
இவற்றில் முன்னணியில் வரும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் என அறிவிக்கப்ட்டுள்ளது.
புதிய விதிகள்:
1 .கூடுதலாக drs மறுஆய்வு ஒன்று வழங்கப்பட்டு அணிக்கு 2 drs முறைகள் வழங்கப்பட்டுள்ளது.
2. சூப்பர் ஓவர் முறை நடத்தப்பட முடியாத சூழல் அட்டவணையில் முன்னணியில் இருக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
3. விக்கெட் பறிபோன பேட்மேன் இடத்தில் புதிய பேட்மேன் தான் ஸ்டிக்கர் கோட்டில் விளையாட வேண்டும்.