தாலி கட்டிய சிறிது நேரத்திலேயே உயிரிழந்த 26 வயது புதுமாப்பிள்ளை
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் புதுமாப்பிள்ளை தாலி கட்டிய சிறிது நேரத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாரடைப்பு
கர்நாடகாவின் கும்பரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் (26). இவருக்கும் 23 வயது இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயமானது.
அதன்படி ஜமகண்டியில் உள்ள மண்டபம் ஒன்றில் நேற்று திருமணம் நடந்தது. மணமகளுக்கு பிரவீன் தாலி கட்டிய பின், இருவரும் திருமண வரவேற்பு நிகழ்வில் பங்குபெற்றனர்.
அப்போது பிரவீனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சுருண்டு கீழே விழ, அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம்
இரு வீட்டாருக்கும் பேரதிர்ச்சி
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பிரவீன் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது இரு வீட்டாருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இச்சம்பவம் இருவீட்டாரின் குடும்பத்தையும், மண்டபத்தில் கூடியிருந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
பொலிஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |