நெதன்யாகுவுக்கு மிரட்டல் விடுத்த ஹிஸ்புல்லாவின் புதிய தலைவர்: இஸ்ரேல் அளித்த பதில்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொலை செய்யப் போவதாக ஹிஸ்புல்லா படைகளின் புதிய தலைவர் தமது முதல் உரையில் மிரட்டல் விடுத்துள்ளார்.
பின்வாங்கச் செய்யாது
ஹிஸ்புல்லா தலைவர் பொறுப்பு என்பது வெறும் தற்காலிகமானது மட்டுமே என இஸ்ரேல் ராணுவம் குறிப்பிட்டிருந்த நிலையில், அதன் தலைவர் Naim Qassem விவகாரமான பதிலடி அளித்துள்ளார்.
இதனையடுத்து இஸ்ரேலின் கொலைப்பட்டியலில் 71 வயதான Naim Qassem தற்போது இடம் பிடித்துள்ளார் என்றே நம்பப்படுகிறது. நெதன்யாகு குடியிருப்பின் மீது ட்ரோன் தாக்குதல் நடந்ததை குறிப்பிட்டுள்ள நைம் காசிம்,
எங்கள் கிராமங்கள் மற்றும் நகரங்கள் மீதான குண்டுவீச்சு எங்களை பின்வாங்கச் செய்யாது என்பதை எதிரி அறிந்திருக்க வேண்டும். நாங்கள் வலுவாக உள்ளோம், நெதன்யாகுவின் அறைக்கு ஒரு ட்ரோனை அனுப்ப எங்களால் முடிந்தது என்றார்.
குறித்த தாக்குதல் சம்பவத்தின் போது நெதன்யாகு குடும்பம் அந்த குடியிருப்பில் காணப்படவில்லை. அது நெதன்யாகுவின் விடுமுறை மாளிகை என்றும் கூறப்படுகிறது. ஆனால் தமது குடியிருப்பு மீதான தாக்குதலுக்கு பதிலடி உறுதி என்றே நெதன்யாகு அறிவித்துள்ளார்.
பொறுமை காக்க வேண்டும்
ஆனால், நெதன்யாகு இந்த முறை தப்பியுள்ளார், அவரது நேரம் இன்னும் வரவில்லை போல. நெதன்யாகு பயத்தில் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது, நாங்கள் அவரை குறி வைத்திருப்பது அவருக்கு தெரியும் என்றார்.
லெபனானில் உள்ள தங்களது ஆதரவாளர்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள காசிம், நஸ்ரல்லாவின் இரத்தம் எங்களது நரம்புகளில் தொடர்ந்து கொதிக்கும், இந்தப் பாதையில் தொடர்ந்து செல்வதற்கான எங்களது உறுதியை அது அதிகரிக்க செய்யும் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |