விளாடிமிர் புடினுக்கு எதிராக களமிறங்கிய மூன்று ஐரோப்பிய நாடுகள்: பின்னப்படும் இரும்பு வேலி
உக்ரைனுக்கு எதிராக புடினின் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் ஐரோப்பிய நாடுகள் தங்கள் எல்லைகளில் மீண்டும் இரும்பு வேலிகளை எழுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எழும்பும் இரும்பு வேலிகள்
ஜேர்மனியில் பெர்லின் சுவர் வீழ்த்தப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆன பின்னர், புதிதாக ஐரோப்பிய நாடுகள் இரும்பு வேலிகளை தங்கள் எல்லைகளில் பின்னுவதாக கூறப்படுகிறது.
@EPA
3 நாட்களில் உக்ரைனை கைப்பற்ற புறப்பட்ட விளாடிமிர் புடினின் துருப்புகள் 9 மாதங்களாக போரிட்டு வருகிறது. இந்த நிலையில் பெலாரஸ் மற்றும் ரஷ்யாவில் இருந்து ஆயுதம் ஏந்திய ஊடுருவலை தடுக்கும் நோக்கில் போலந்து, பின்லாந்து மற்றும் லாத்வியா நாடுகள் தங்கள் எல்லைகளில் இரும்பு வேலிகளை எழுப்பி வருகிறது.
உக்ரைன் மீதான போர் தொடங்கிய நாட்களிலேயே மேற்கத்திய நாடுகள் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகள் அகதிகள் போர்வையில் பயிற்சி பெற்ற தங்கள் வீரர்களை அனுப்பி ஸ்திரத்தன்மையை கெடுக்கும் சூழ்ச்சிகளை முன்னெடுக்கலாம் என எச்சரித்திருந்தனர்.
@AP
2015 மற்றும் 2016ல் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த அகதிகளை திரட்டி ரஷ்யா வடக்கு பின்லாந்து எல்லைக்கு அனுப்பி வைத்தது.
ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு
மேலும், ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல பெலாரஸ் அனைத்து உதவிகளையும் ஏற்படுத்தும் என போலியான வாக்குறுதிகளை அளித்து பெலாரஸ் ஜனாதிபதி அகதிகளை போலந்து எல்லைக்கு அனுப்பி சட்ட விரோத ஊடுருவலுக்கு கட்டாயப்படுத்தியதாக 2021ல் ஐரோப்பிய ஒன்றியமும் குற்றஞ்சாட்டியிருந்தது.
இதற்கு முடிவுகட்டும் வகையில் 115 மைல்கள் தொலைவிற்கு முள்வேலி அமைத்து தமது எல்லையை பாதுகாக்கும் கட்டாயத்திற்கு போலந்து தள்ளப்பட்டது. தற்போது உக்ரைன் மீதான ரஷ்ய போர் 9வது மாதத்தில் நீடித்து வருவதால், பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் எல்லைகளில் முள்வேலி அமைக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
@getty
பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தங்களின் எல்லையில் 830 மைல்கள் தொலைவிற்கு இரும்பு வேலி அமைக்க திட்டத்தை அறிவித்துள்ளார். அத்துடன் இந்த வரிசையில், லாத்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்தோனியாவும் இணையவிருக்கிறது.
இதனால், 2025ஐ எட்டும்போது மொத்தமாக 2,106 மைல்களுக்கு முள்வேலி அமைக்கப்பட்டிருக்கும் என்றே கூறப்படுகிறது.
@AP