ஒரு நாட்டின் மக்களுக்கு ஒரே இரவில் 1 வயது குறைந்த சம்பவம்!
தென்கொரியாவில் புதிய சட்டத்தின் மூலம் மக்களுக்கு ஒரே இரவில் ஒரு வயது குறைந்துள்ளது.
கொரிய வயது கணக்கிடும் முறை
தென் கொரிய நாட்டில் வயதை கணக்கிடும் முறை வித்தியாசமானது. அங்கு குழந்தை வயிற்றில் இருக்கும்போதே வயது கணக்கிடப்படும்.
இதன்படி சனவரி 1ஆம் திகதி வந்தவுடன் அவர்கள் வயதில் 1 வருடம் சேர்ந்து கொள்ளும். இது Korean Age System என்று கூறப்பட்டு வந்தது.
இந்த முறையில் ஒரு குழந்தை டிசம்பர் 31ஆம் திகதி பிறந்தால், சனவரி 1ஆம் திகதி அதன் வயது 2 ஆக எடுத்துக் கொள்ளப்படும்.
YONHAP/EPA-EFE/SHUTTERSTOCK
புதிய சட்டம்
இந்நிலையில் அந்நாட்டில் சர்வதேச வயது கணக்கீட்டு முறை அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் வயது உலக நாடுகளின் வழக்கப்படி பூச்சியமாகவே கணக்கிடப்படும்.
இந்த நடைமுறையை 70 சதவீத தென் கொரிய மக்கள் வரவேற்றுள்ளனர். இதனால் அந்நாட்டு மக்கள் 1 வயது குறைந்துள்ள சுவாரசிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.
Anthony Wallace/AFP/Getty Images