மணமேடையிலேயே கட்டிப்பிடித்து உருண்ட புதுமண ஜோடி! வைரலாகும் வீடியோ
- மணமேடையிலேயே மணமக்கள் சண்டையிட்டது திருமண நிகழ்வை கலகலப்பாக்கியது
- மாப்பிள்ளையும், மணமகளும் கட்டிப்பிடித்து உருண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது
நேபாள நாட்டில் திருமணத்தின்போது மணமகனும், மணமகளும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தெற்காசிய நாடான நேபாளத்தில் நடந்த திருமணத்தில், மணமக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
திருமண நிகழ்வின்போது மணமகனும், மணமகளும் ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டிவிடுவது வழக்கம். அதன்படி இந்த திருமணத்தில் மணமகள் ஊட்டிவிடும்போது சற்று அழுத்தமாக இனிப்பை திணித்துவிட்டார்.
இதனால் கோபமடைந்த அவர் மணமகளை தாக்கினார். பதிலுக்கு மணமகளும் தாக்க, இருவரும் மணமேடையிலேயே  கட்டிப்பிடித்து உருண்டு சண்டையிட்டனர்.
உடனே உறவினர் ஒருவர் அவர்களை தடுக்க முயன்றபோதும், இருவரும் சண்டையிடுவதை நிறுத்தவில்லை. இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.      
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        