தொப்புள் கொடியுடன் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட குழந்தையின் தந்தை இவர்தான்... தாத்தா எடுத்துள்ள அதிரடி முடிவு
அமெரிக்காவில் தொப்புள் கொடியுடன் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குழந்தையின் தந்தை யார் என தெரியவந்துள்ள நிலையில், குழந்தையின் தாத்தா தங்கள் குழந்தைக்காக நீதிமன்றம் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு (ஜனவரி 7ஆம் திகதி), அமெரிக்காவிலுள்ள New Mexico என்ற இடத்தில், குப்பைத்தொட்டிகளில் பயனுள்ள பொருட்கள் ஏதாவது கிடைக்குமா என்று தேட வந்த சிலர், பை ஒன்றிற்குள் ஒரு குழந்தை இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
உடனடியாக அவர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
அந்த அழகான ஆண் குழந்தை, தொப்புள் கொடி கூட அகற்றப்படாமல், சுமார் ஆறு மணி நேரம் கடுங்குளிரில் கிடந்ததால், ஹைப்போதெர்மியா என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட, மருத்துவர்கள் அதற்கு இரத்தம் ஏற்றி, குழாய் மூலம் உணவும் ஆக்சிஜனும் செலுத்தி, சிகிச்சையளித்தார்கள்.
இதற்கிடையில், குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசியது யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCYV கமெராவைப் பரிசோதிக்கும்போது, காரில் வந்த இளம்பெண் ஒருவர் ஒரு பையை குப்பைத் தொட்டியில் வீசுவது தெரியவந்துள்ளது.
பொலிசார் அந்தப் பெண்ணைத்தேட, குழந்தையைக் குப்பைத்தொட்டியில் வீசியது Alexis Avila (18) என்ற இளம்பெண் என்பது தெரியவந்தது.
விசாரணையில், தனது பதின்ம வயதில் உள்ள ஒரு பையனுடன் தான் பழகியதாகவும் நெருங்கிப் பழகியபின் கடந்த ஆகத்து மாதம் இருவரும் பிரிந்ததாகவும் கூறியுள்ளார் Avila.
இந்நிலையில், Avila கடந்த வியாழக்கிழமை வயிறு வலி காரணமாக மருத்துவரைப் பார்க்கச் செல்ல, அவரைப் பரிசோதித்த மருத்துவர், Avila கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். வீட்டுக்கு வந்த Avilaவுக்கு அன்றே குழந்தை பிறக்க. குழந்தையை ஒரு துணியில் சுற்றி, குப்பை போடும் கவரில் போட்டு குப்பை தொட்டியில் வீசிவிட்டிருக்கிறார்.
இந்நிலையில், அந்த குழந்தையின் தந்தை, அதாவது Avilaவின் காதலர் பெயர் Stephen (16) என தெரியவந்துள்ளது.
Stephenஇன் தந்தையான Oscar Astorga (50), அந்தக் குழந்தை தன் மகனுடைய குழந்தை என்றும், தாங்கள் அந்தக் குழந்தையை பொறுப்பில் எடுத்துக்கொள்வதற்காக நீதிமன்றம் செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தன் மகனுடைய காதலி கர்ப்பமாக இருந்தது தன் மகனுக்குத் தெரியாது என்று அவர் கூறியுள்ள நிலையில், Stephenம், Avilaவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டதாக தான் எண்ணிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தான் கர்ப்பமாக இருப்பதே தனக்குத் தெரியாது என Avila கூறியுள்ள நிலையில், அவரது தோழிகளோ, Avila தனது கர்ப்பம் குறித்து வெளிப்படையாக தங்களிடம் பேசியதாக தெரிவித்துள்ளார்கள்.
தற்போது Avila மீது கொலைமுயற்சி, மற்றும் குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.