ஒடிசாவில் அமைச்சருக்கு நிகரான புதிய பதவி: தமிழக IAS அதிகாரிக்கு கிடைத்த வாய்ப்பு
இந்திய மாநிலம், ஒடிசா முதலமைச்சராக பணியாற்றிய தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கார்த்திகேய பாண்டியன் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்திருந்த நிலையில், அவருக்கு அமைச்சர் அந்தஸ்த்தில் புதிய பதவி அளிக்கப்பட்டுள்ளது.
யார் இவர்
கடந்த 2000 -ம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றார். பின்பு, ஒடிசா மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றினார்.
அதன் பிறகு, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு 10 ஆண்டுகள் பணிபுரிந்தார். இதனால், முதலமைச்சருக்கு நெருக்கமான அதிகாரியாக வி.கார்த்திகேய பாண்டியன் இருந்தார்.
மேலும் இவர், குழு வேலை, தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை, கால நிர்ணயம் உள்ளிட்ட 5 ஒருங்கிணைந்த துறைகளின் சிறப்பு செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
ஒரு கட்டத்திற்கு மேல், நவீன் பட்நாயக்கின் அடுத்த அரசியல் வாரிசு எனவும் எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டார்.
புதிய பதவி
இதனிடையே, நிகழ்ச்சி ஒன்றில் வி.கார்த்திகேய பாண்டியன் மீது எதிர்க்கட்சிகள் கருப்பு மை வீசினர். இதனால், வி.கார்த்திகேய பாண்டியனின் விருப்ப ஓய்வுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், அமைச்சர் அந்தஸ்தில் புதிய பதவியை வி.கார்த்திகேய பாண்டியனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், அவர் அரசியலில் கால் பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், ஒடிசா திட்டங்களின் சேர்மனாக வி.கார்த்திகேய பாண்டியனை நியமித்து அம்மாநில அரசு உத்தரவிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |