இது மாதிரியான லிங்கை கிளிக் செய்ய வேண்டாம்: பிரபல நகைக்கடை எச்சரிக்கை
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையொட்டி, துணிக்கடை மற்றும் நகைக்கடைகளில் தள்ளுபடி தருவதாக வரும் லிங்குகளை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போலி லிங்குகள்
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வரும் நவமபர் 12 -ம் திகதி தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கிறது.
இந்நிலையில், நகைக்கடைகள், துணிக்கடைகள், உணவகங்கள் போன்றவை தள்ளுபடி தருவதாக கூறி போலியான லிங்குகளை அனுப்பி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நகைக்கடை அறிவிப்பு
இந்நிலையில், பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை நிறுவனம் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட கடிதத்தில், "எங்களது நிறுவனத்தின் 36 -வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சிறப்பு பரிசு தருவதாக போலி லிங்குகள் பகிரப்பட்டு வருகிறது.
இந்த லிங்குகளை நீங்கள் கிளிக் செய்து உள்ளே சென்றால் பணத்தை இழக்க வாய்ப்புள்ளது. எனவே, இது மாதிரியான லிங்குகள் வந்தால் அதனை உடனே டெலிட் செய்து விடுங்கள்" என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இந்த மாதிரியான மோசடி லிங்கை பகிர வேண்டாம் என காவல்துறையினர் மற்றும் தனியார் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |