கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
அமெரிக்காவில் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த ஒரு பெண்ணை கொரோனா தாக்கியது.
டெக்சாஸைச் சேர்ந்த Aimee 'Jaqueline' Ayala (22)க்கு, நவம்பர் மாதம் 7ஆம் திகதி, கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Aimeeக்கு, நவம்பர் மாதம் 13ஆம் திகதி, அறுவை சிகிச்சை முறையில் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.
Addison Mariand Morale என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தை பிறந்ததும், அதை தாயிடம் ஒரு முறை காட்டிவிட்டு, குழந்தைகளுக்கான மருத்துவமனை பிரிவுக்கு குழந்தையை மாற்றிவிட்டார்கள்.
தன் குழந்தையுடன் தன்னால் நேரம் செலவிட இயலாததால் கடும் வேதனையடைந்தார் Aimee.
துயரம் என்னவென்றால், அவரது நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி, நவம்பர் மாதம் 30ஆம் திகதி உயிரிழந்துவிட்டார் அவர்.
அவர் உயிருடன் இருந்தபோது, தான் முதன் முதலாக தாயான நிலையிலும், தன் மகளுடன் நேரம் செலவிட இயலாததால், தான் மனச் சோர்வடைந்துள்ளதாகவும், மன அழுத்தத்திலிருப்பதாகவும் பேஸ்புக் இடுகை ஒன்றில் தெரிவித்திருந்தார் Aimee.
குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்துள்ள குழந்தையின் தந்தையான Juan Pablo Morales Orozco, இப்போது அவள்தான் எனது பலமாக இருக்கிறாள். நான் அவளை சுமப்பதற்கு பதில், அவள்தான் என்னை சுமக்கிறாள் என்கிறார் துயரத்துடன்.