அமெரிக்காவில் புத்தாண்டு தின கொடூரம்: வாகன தாக்குதலில் 10 பேர் பலி! வெளியான சந்தேக நபரின் புகைப்படம்
அமெரிக்காவில் புத்தாண்டு தினத்தில் நடந்த கொடூரமான வாகன தாக்குதலில் 10 உயிரிழந்ததுடன் டஜன் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
பயங்கரமான வாகன தாக்குதல்
புத்தாண்டு தினத்தில் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ்(New Orleans) நகரின் மையப்பகுதியில் வாகன ஓட்டி ஒருவர், கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது வேண்டுமென்றே மோதியதில், குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதல் நகரின் பிரபலமான பகுதியில் அதிகாலை 3:15 மணி அளவில் நிகழ்ந்துள்ள நிலையில், குறைந்தது 35 பேர் வரை இதில் காயமடைந்துள்ளனர்.
வாகன தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர் பொலிஸாருடன் நடத்திய துப்பாக்கி சண்டையின் போது கொல்லப்பட்டார்.
அடையாளம் காணப்பட்ட தாக்குதல்தாரி
FBI, தாக்குதல் நடத்திய சந்தேக நபர் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த அமெரிக்க குடிமகன் ஷம்சுத்-தின் ஜப்பார்(Shamsud-Din Jabbar) என அடையாளம் கண்டுள்ளது.
இவர் வாடகைக்கு எடுத்த ஃபோர்டு பிக்-அப் லொறியை(Ford pickup truck) கொண்டு வேண்டுமென்றே பொதுமக்கள் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.
இந்நிலையில், அதிகாரிகள் இவர் எவ்வாறு வாகனத்தைப் பெற்றார் என்பது குறித்தும், பயங்கரவாத அமைப்புகளுடன் இவருக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகனத்திற்குள் இருந்த ISIS கொடி
தாக்குதல் வாகனத்திற்குள் ISIS கொடி, ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள் சாதனங்கள்(IED) என நம்பப்படும் பொருட்களும் வாகனத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டன.
🚨 #BREAKING: MULTIPLE pipe bombs were found in truck used in New Orleans attack, and they were wired for remote detonation, per AP
— Nick Sortor (@nicksortor) January 1, 2025
This comes minutes after it was revealed police have reviewed video of 3 men and 1 women placing other bombs
BIG plot. pic.twitter.com/JhC4pxlb18
இதனால் இந்த தாக்குதலின் நோக்கம் குறித்து கடுமையான கவலைகளை அதிகாரிகள் முன்வைத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |