அமெரிக்க ராணுவ தளங்களை தரைமட்டமாக்கிய ஈரான்: வெளியான புதிய புகைப்படங்கள்
New Photos Reveals Iran Strike Damage to US Camps: மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல்
மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்கா ராணுவ முகாம்களை குறிவைத்து ஈரானிய புரட்சிகர காவல் படையினர் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஈரானின் இந்த தாக்குதலால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சேதங்களையும் விளக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படங்களை அமெரிக்க செய்தி நிறுவனமான CBC அதன் கூட்டாளியான BBC நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட முகாம்களில் உள்ள அமெரிக்க வீரர்களால் இந்த புகைப்படங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி, சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் கடுமையாக சேதமடைந்து இருப்பதை பார்க்க முடிகிறது.
குறிப்பாக சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த போயிங் E-3 சென்டரி(Boeing E-3 Sentry) என்ற ராணுவ விமானம் ஈரானின் வான்வழித் தாக்குதலில் இரண்டாக பிளந்து வால் பகுதி முற்றிலுமாக நொறுங்கி போயுள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் ராணுவ வீரர்களின் குடியிருப்பு அமைப்புகளும், பல முக்கிய கட்டிடங்களும் தரைமட்டமாக்கப்பட்டு இருப்பது புகைப்படங்களில் பார்க்க முடிகிறது.

இந்த புகைப்படங்களை வெளியிட்ட BBC, இந்த புகைப்படங்களின் நம்பகத்தன்மையை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.
இருப்பினும், மத்திய கிழக்கில் ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்கா முகாம்களில் உள்ள பல கட்டிடங்கள் சேதமடைந்து இருப்பதாக பெண்டகன் சமீபத்திய அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.