204 பேர் ஆதரவு, 85 எதிர்ப்பு: தென்கொரிய ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய புதிய தீர்மானம்
தென்கொரிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவசரநிலை பிரகடனம்
கடந்த 3ஆம் திகதி தென்கொரியாவில் ஜனாதிபதி யூன் சுக் யோல் திடீர் அவசரநிலையை பிரகடனப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனால் அவரை பதவிநீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தன. ஆனால், ஆளுங்கட்சியினர் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை புறக்கணித்ததால் தோல்வியடைந்தது.
இந்த நிலையில், யூன் சுக் யோலை பதவிநீக்கம் செய்ய ஜனநாயக கட்சி மற்றும் 5 சிறிய கட்சிகள் இணைந்து மீண்டும் புதிய தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன.
180 நாட்களுக்குள்
இதன் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதில் 204 எம்.பி.க்கள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 85 எம்.பிக்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
இதன்படி தென்கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்வதா அல்லது அதிகாரத்தை திரும்ப வழங்குவதா என 180 நாட்களுக்குள் நீதிமன்றம் முடிவு செய்யும்.
ஒருவேளை ஜனாதிபதி பதவிநீக்கம் செய்யப்பட்டால், அடுத்த 60 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |