அதிக Simcard வைத்திருந்தால் 3 ஆண்டு சிறை, 2 லட்சம் அபராதம்? DoT விதி கூறும் எச்சரிக்கை
ஒருவர் தனது ஆதாருடன் 9 சிம்கார்டுகளுக்கு (Simcard) மேல் வைத்திருந்தால் 2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் DoT விதிமுறை அமுலுக்கு வந்துள்ளது.
தொலைத்தொடர்பு துறையில் Simcard தொடர்பில் புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. அதாவது, டெலிகாம் சட்டத்தில் DoT விதிகளின்படி ஒருவர் 9 Simcard-களை மட்டுமே வாங்க முடியும்.
9 Simcard-களுக்கு மேல் இருந்தால் அவர் ரூ.50,000 அபராதம் செலுத்த வேண்டும். மீண்டும் மீறுபவர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
அதே போல் தவறான முறையில் Simcard பெற்றால் ரூ.50 லட்சம் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய சூழ்நிலையில் உங்கள் ஆதாருடன் எத்தனை Simcard-கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறிந்துகொள்வது மிகவும் அவசியம்.
மேலும், நீங்கள் எந்த Simcard-ஐயும் பயன்படுத்தவில்லை என்றால், அதன் இணைப்பைத் துண்டிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |