பிப்ரவரி 22 முதல்... பிரித்தானியாவிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இந்தியா. புதிய திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்தியா வெளியிட்டுள்ளது. அவை, பிப்ரவரி மாதம் 22ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும். அவையாவன:
இந்தியா வரும் பயணிகள், புறப்படும் முன் இணையத்தில் சுய விளக்க ஆவணம் ஒன்றை சமர்ப்பிக்கவேண்டும் (www.newdelhiairport.in).
பிசிஆர் முறையில் செய்யப்பட்ட பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆவணம் ஒன்றை பதிவேற்றம் செய்யவேண்டும். இந்த பரிசோதனை பயணம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் செய்யப்பட்டிருக்கவேண்டும்.
அவர்கள் இந்தியா வந்ததும், 14 நாட்களுக்கு தாங்கள் உடல் நலத்துடன் இருப்பதை கவனித்துக்கொள்ளவேண்டும்.
Attention Passengers!
— MoCA_GoI (@MoCA_GoI) February 17, 2021
To reduce the risk of importation of mutant strains of SARS-CoV-2, SOP for International Passengers arriving in India have been updated in supersession of all guidelines on the subject since 2 Aug20. The new SOP will be in effect on 23:59 hrs on 22nd Feb,21 pic.twitter.com/YoGFkitP2t
All incoming international travellers coming/transiting through flights originating from United Kingdom, Europe and Middle East should make sure that they follow the new guidelines issued by @MoHFW_India. pic.twitter.com/uwgj1RBqW9
— MoCA_GoI (@MoCA_GoI) February 17, 2021
இந்த அறிவிப்பு, பிரித்தானியாவிலிருந்து நேரடியாக இந்தியாவுக்கு வருபவர்களுக்கு மட்டுமின்றி, நடுவில் அரபு நாடுகள் வழியாக விமானம் மாறி பயணிக்கும் பிரித்தானியா, பிரேசில், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருபவர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களைப் பொருத்தவரை, மேற்சொல்லப்பட்டுள்ள நெறிமுறைகளுடன், கடந்த 14 நாட்களில் அவர்கள் எந்தெந்த நாடுகளுக்கு சென்றுள்ளார்கள் என்பது குறித்த விவரங்களையும் சமர்ப்பிக்கவேண்டும்.
மேலும், இப்படி நடுவில் விமானம் மாறி வருபவர்கள், அந்த விமான நிலையத்திற்குள் வந்ததும், அவர்களுக்கு அங்கும் ஒரு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்பதால், இரண்டு விமான பயணங்களுக்கும் நடுவில் 6 முதல் 8 மணி நேர இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
அங்கு கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டால், அவர்கள் அடுத்த விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவார்கள். என்றாலும், இந்தியா வந்ததும் அவர்கள் 7 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.
அதே நேரத்தில், அவர்களுக்கு விமான நிலைய பரிசோதனையின்போது கொரோனா இருப்பதாக தெரியவந்தாலோ, அல்லது இந்தியா வந்து தனிமைப்படுத்தலின்போது கொரோனா இருப்பது தெரியவந்தாலோ, அவர்கள் அதிகாரிகளால் கொரோனா நோயாளிகளுக்கான நிறுவனங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்.
சமீபத்தில், இந்தியா திரும்பிய ஐந்து பயணிகளுக்கு தென்னாப்பிரிக்க மற்றும் பிரேசில் வகை திடீர் மாற்றம் பெற்ற கொரோனா தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.