ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகள்: அமெரிக்க செனட் சபையில் கிடைத்த ஒப்புதல்
ரஷ்யா மீதான புதிய பொருளாதார தடைகளுக்கு அமெரிக்காவின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை
அமெரிக்க செனட் சபையில் கொண்டு வரப்பட்ட ரஷ்யாவிற்கு எதிராக புதிய மற்றும் கடுமையான பொருளாதார தடைக்கு எதிரான வாக்கெடுப்பு பெரும் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது.
ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதார தடைகளுக்கு ஆதரவு அளித்து 86 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் பதிவாகியுள்ளது.

ரஷ்யாவுக்கு எதிராக இந்த முன்னெடுப்பை மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம்(Lindsey Graham) தீவிரமாக முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் குறித்து பேசிய ஜனநாயக கட்சி செனட்டர் ரிச்சர்ட் ப்ளூமென்டால்(Richard Blumenthal) முக்கியமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அதில், உக்ரைனிய மக்களுக்கு நாம் இன்று சொல்வது இதுதான், “நீங்கள் தனியாக இல்லை”. அத்துடன் ரஷ்யாவிற்கு நாம் இன்று சொல்வது இதுதான், “உங்களால் உக்ரைனை வெல்ல முடியாது” என குறிப்பிட்டார்.
விதிக்கப்படும் புதிய தடைகள்
ரஷ்யாவின் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் ரஷ்யாவிற்கு வருவாய் பெற்று தரும் பொருட்களை இறக்குமதி செய்யும் அனைத்து நாடுகளையும் இந்த புதிய பொருளாதார தடை நடவடிக்கை தண்டிக்கும்.

செனட் சபையில் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியுள்ள நிலையில், செப்டம்பர் மாதம் இந்த மசோதா பிரதிநிதிகள் சபையின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.
புதிய சட்டம் பிரதிநிதிகள் சபையிலும் வெற்றி பெற்று என்னுடைய மேஜைக்கு வந்தால் கண்டிப்பாக நானும் அதனை ஏற்று கையெழுத்திட தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |