10 ஆண்டுகால மர்மம்! காணாமல் போன MH370 விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடக்கம்
காணாமல் போன மலேசியாவின் MH370 விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
காணாமல் போன மலேசிய விமானம்
மலேசியா ஏர்லைன்ஸ் MH370 விமானம் 2014 மார்ச் 8 அன்று கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் சென்றுகொண்டிருந்தபோது காணாமல் போனது.
இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் மலேசியா, அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டன, கிட்டத்தட்ட இந்தியப் பெருங்கடலின் 120,000 சதுர கிலோ மீட்டர் (46,332 சதுர மைல்) பரப்பளவை தேடுதல் பணி நிறைவு செய்து இருந்தது.
ஆனால் குறிப்பிடத்தக்க விமானத்தின் சிதைவு பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
விமானத்தின் பாகங்கள் என்று நம்பப்படும் சில சிதைவுகள் மட்டும் ஆப்பிரிக்காவின் கடற்கரைகளிலும் இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுகளிலும் கரை ஒதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.
இறுதியில் பலனளிக்காத இந்த தேடல் வேட்டையானது 2018ம் ஆண்டு நிறைவுக்கு வந்தது.
இருப்பினும், காணாமல் போன விமானத்தில் இருந்த 150க்கும் மேற்பட்ட சீனர்களின் குடும்பத்தினர், தொடர்ந்து புதிய தேடுதல் முயற்சிகளை மேற்கொள்ளவும் மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் பிற தரப்பினரிடமிருந்து இழப்பீடு கோரியும் வருகின்றனர்.
ஆரம்பத்தில் விமானம் வேண்டுமென்றே அதன் பாதையில் இருந்து திசை திருப்பப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியத்தை மலேசிய புலனாய்வாளர்கள் நிராகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் போயிங் 777 விமானத்தின் இந்த மறைவு, விமானப் போக்குவரத்தின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
Back at it again. Malaysia resumes search for flight MH370
— RT (@RT_com) December 20, 2024
The hunt is being spearheaded by exploration firm Ocean Infinity, which stands to pocket $70 million (but only if ‘substantial’ wreckage is found) pic.twitter.com/wJ62lKCfb1
மீண்டும் தொடங்கும் தேடல் பணி
இந்நிலையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகால மர்மமான MH370 விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
இதில், முன்பு தேடுதல் பணிகளில் ஈடுபட்ட கடல் ரோபோட்டிக்ஸ் நிறுவனமான ஓஷன் இன்ஃபினிட்டி(Marine robotics firm Ocean Infinity) களமிறங்க உள்ளது.
நீருக்கடியில் இயங்கும் ரோபோட்டிக் வாகனங்களை இயக்கும் மற்றும் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், தெற்கு இந்திய பெருங்கடலில் ஒரு புதிய பகுதியில் தேடுதல் பணிகளை மேற்கொள்ள மலேசிய அரசாங்கத்துடன் கொள்கை அளவில் உடன்பாட்டை எட்டியுள்ளது.
இது தொடர்பாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த தகவலில், குறிப்பிடத்தக்க அளவு சிதைவுகளை கண்டுபிடித்தால் ஓஷன் இன்ஃபினிட்டி(Ocean Infinity) நிறுவனத்திற்கு $70 மில்லியன் (£56 மில்லியன்) வெகுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |