குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையை பிரான்ஸ் எளிதாக்கிவிட்டதாம்: உங்களுக்குத் தெரியுமா?
குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையை, இம்மாதம், அதாவது பிப்ரவரி 6ஆம் திகதி முதலே, பிரான்ஸ் அரசு எளிதாக்கிவிட்டதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
புதிய இணையதளம்
பிரெஞ்சுக் குடியுரிமைக்கு விண்ணப்புக்கும் நடைமுறையை எளிதாக்குவதற்காக, பிரான்ஸ் அரசு NATALI online portal என்னும் இணையதளப் பக்கத்தை உருவாக்கியுள்ளது.
NATALI என்பது என்ன?
NATALI என்பது, ஒன்லைனில் குடியுரிமை விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான ஒரு இணையதள சேவையாகும்.
பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு இரண்டு முக்கியமான வழிகள் உள்ளன. ஒன்று, நீங்கள் பிரான்சில் ஐந்து ஆண்டுகளாகவாவது (பிரான்சில் உயர் கல்வி முடித்திருந்தால், இரண்டு ஆண்டுகள்) வாழ்ந்துவருபவராக இருக்கவேண்டும். இரண்டு, பிரெஞ்சுக் குடிமகன் அல்லது குடிமகள் ஒருவரை நீங்கள் திருமணம் செய்திருக்கவேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.
NATALIயில் என்ன புதுமை உள்ளது?
NATALI, நாடு முழுவதற்குமான குடியுரிமை விண்ணப்பிப்பதற்கான ஒரே ஒன்லைன் தளமாகும். ஒரு விண்ணப்பம், அதற்குப் பின் ஒரு நேர்காணல், அதில், பிரான்ஸ் மற்றும் பிரெஞ்சு கலாச்சாரம் குறித்த உங்கள் அறிவு சோதிக்கப்படும். விண்னப்பம் அங்கீகரிக்கப்படுபவர்கள் குடியுரிமை பெறும் நிகழ்ச்சிக்கு அழைகப்படுவார்கள்.
நீங்கள் விண்ணப்பித்த இணையதளத்திலேயே, உங்கள் விண்ணப்பத்தின் நிலையையும் ட்ராக் செய்யலாம்.
எப்போது இந்த இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது?
NATALI, இம்மாதம் அதாவது, பிப்ரவரி 6அம் திகதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.