சீமானுடன் இல்லை... ரஜினியுடனா அல்லது திமுகவுடனா? தேர்தலில் கமல் போடும் மாஸ்டர் பிளான் இது தானாம்
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சீமானுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
தமிழக அரசியலில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும், சட்டசபை தேர்தல் மிகப் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. ஏனெனில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இரண்டு பேரும் இல்லாத தேர்தலாக இது பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அடுத்த மாதம் சசிகலாவின் வருகையும், கமலின் புதிய கட்சி அறிவிப்பும், ரஜினியின் அரசியல் அறிவிப்பும் போன்றவை இந்த முறை தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், யார் ஓட்டு எல்லாம் பிரியப் போகிறது? யார் எத்தனை சதவீதம் ஒட்டு வாங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
இந்நிலையில், புதித்தாக கட்சி ஆரம்பித்துள்ள கமல், முதலில் சீமானுடன் கூட்டணி வைக்க முடிவு செய்திருந்ததாகவும், ரஜினியின் அரசியல் வருகைக்கு பின் அது அப்படியே மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழக அரசியல் களத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாட்டில் திமுக, தேசிய அளவில் காங்கிரஸ்தான்.. எனவேதான், சிறுபான்மையினரில் பெரும்பாலானோர், தேர்தலின்போது இந்த 2 கட்சிகளுக்கும், விடாமல் வாக்களித்து வருகின்றனர்.
இந்த சிறுபான்மையினர் வாக்குகளைத்தான் கமல் பிரிக்கக்கூடும் என்பது திமுகவின் கணக்கு. மேலும் காங்கிரஸை கழட்டிவிட்டு, கமலை உள்ளே இழுத்து போடும் அடுத்த முயற்சி என்றும் சொல்லப்படுகிறது.
அந்த வகையில் 25 சீட்டுக்கள் கமலுக்கு திமுக வழங்க தயாராக இருப்பதாகவும், அதற்காக கமலை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் இறங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் 45 சீட் கேட்ட கமல், இந்த 25 சீட்டுக்கு ஒப்புக் கொள்வாரா என்பது சந்தேகம் தானாம், அப்படி ஒருவேளை ஒப்புக் கொள்வாரானால், 5 சதவீத ஓட்டுக்களை மக்கள் நீதி மய்யம் அசால்ட்டாக பெறக்கூடும் என்கிறார்கள்.
ரஜினி கமலுடன் இணைவரானால், அதில் ஓவைசியும் இணையலாம், இவர்கள் அனைவரும் சேர்ந்து 10 சதவீத ஓட்டுக்களை பெறக்கூடும்.
