பிரித்தானியாவில் ஏப்ரல் 2025 முதல் அமுலுக்கு வரும் புதிய வாகனச் சட்டங்கள்
பிரித்தானியாவில் உள்ள வாகன ஓட்டிகள், ஏப்ரல் 2025 முதல் நடைமுறைக்கு வரும் புதிய சட்டங்களைப் பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் அரசு பொதுவாக சட்ட மாற்றங்களை செயற்படுத்தும், அதனடிப்படையில் வாகன வரி மற்றும் பிற விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
முக்கிய மாற்றங்கள்
1. மின்சார வாகனங்களுக்கு முதல் முறையாக வரி விதிப்பு
முன்பு Vehicle Excise Duty (VED) செலுத்துவதிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த மின்சார வாகனங்கள் (EVs), ஏப்ரல் 1, 2025 முதல் இந்த வரியை கட்ட வேண்டும்.
- புதிதாக பதிவு செய்யும் EV-க்கள் முதல் ஆண்டில் 10 பவுண்டு கட்ட வேண்டும்.
- இரண்டாம் ஆண்டிலிருந்து 190 பவுண்டு (தரமான வாகன வரி) செலுத்த வேண்டும்.
- 40,000 பவுண்டு மதிப்பை மீறும் EV-க்கள், கூடுதல் 410 பவுண்டு செலுத்த வேண்டும்.
2. நிறுவன வாகன ஓட்டிகளுக்கு உயர்ந்த வரி
நிறுவனத்திடமிருந்து வாகனம் பெறும் சாரதிகள் Benefit-in-Kind (BIK) வரி அதிகரிக்கப் போகிறது.
- மின்சார வாகன ஓட்டிகள் 3 சதவீதம் BIK வரி செலுத்த வேண்டும்.
- அதிக கார்பன் டை ஆக்ஸைடு (CO₂) வெளியிடும் வாகனங்களுக்கு அதிகளவில் வரி விதிக்கப்படும்.
3. முதல் ஆண்டு வாகன வரி மாற்றம்
புதிய வாகனங்களை வாங்கும் போது செலுத்த வேண்டிய Showroom Tax ஏப்ரல் 2025 முதல் அதிகரிக்கிறது.
கிலோமீற்றருக்கு எவ்வளவு கார்பன் டை ஆக்ஸைடு (CO₂) வெளியிடுகிறது என்பதை பொறுத்து 10 பவுண்டு முதல் 5,490 பவுண்டுகள் வரை வரி விதிக்கப்படும்.
இது மின்சார வாகனங்கள், ஹைபிரிட் வாகனங்கள் என அனைத்து வகையான வாகனங்களுக்கும் பொருந்தும்.
4. பொதுவாக எல்லா வாகனங்களுக்கும் வரி உயர்வு
ஏப்ரல் 2017 பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் இப்போது 190 பவுண்டு செலுத்தும் நிலையில், ஏப்ரல் 2025 முதல் 195 பவுண்டு செலுத்த வேண்டும்.
5. AI கமெராக்களின் பரிசோதனை முடிவு
வாகன ஓட்டிகள் மொபைல் போனை பயன்படுத்துகிறார்களா அல்லது சீட் பெல்ட் அணிந்து இருக்கிறார்களா என்பதை கண்டறியும் AI Camera பரிசோதனை மார்ச் 2025ல் முடிவடைகிறது.
6. மோசடி செய்யப்பட்ட வாகனக் கடன் (Car Finance) விசாரணை முடிவு
Financial Conduct Authority (FCA) மே 2025-ல் வாகனக் கடன் மோசடி குறித்து தனது முடிவுகளை வெளியிடும்.
2021-க்கு முன் வாகனக் கடன் பெற்றவர்களுக்கு 1,100 பவுண்டு வரை இழப்பீடு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த விசாரணை முடிவுகள் வெளியான பிறகு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
வாகன ஓட்டிகள் என்ன செய்ய வேண்டும்?
புதிய வரி விதிப்புகளை கருத்தில் கொண்டு, மின்சார மற்றும் நிறுவன வாகன ஓட்டிகள் செலவுகளை மதிப்பீடு செய்ய வேண்டும்.
மோசடி செய்யப்பட்ட வாகனக் கடன் குறித்து தங்களுக்குத் தேவையான தகவல்களை முன்பே பெறுவது நல்லது.
2025 முதல் வாகனம் வாங்க விரும்புவோர், Showroom Tax அதிகரிக்க இருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த மாற்றங்கள், வாகன வரி செலுத்தும் முறையில் முக்கியமான மாற்றங்களை கொண்டு வருவதை வாகன ஓட்டிகள் உணர வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |