பிரித்தானியாவில் 95 கிளைகளை மூடும் பிரபல வங்கி., 750 பேருக்கு வேலையிழப்பு அபாயம்
பிரித்தானியாவின் பிரபல வங்கி 95 கிளைகளை மூடவுள்ளது.
பிரித்தானியாவின் பிரபல சாண்டாண்டர் (Santander) வங்கி அதன் 444 கிளைகளில் 95 கிளைகளை மூட திட்டமிட்டுள்ளது.
இதன் காரணமாக 750 பேர் தங்கள் வேலையை இழந்து பாதிக்கப்படவுள்ளனர்.
மீதமுள்ள 290 கிளைகள் மட்டுமே முழுமையான வங்கி சேவைகளை வழங்கும்.
அதில் 36 கிளைகள் குறைந்த நேரப் பணியுடன் செயல்படும், மேலும் 18 கிளைகள் கவுண்டர் சேவையில்லாமல் செயல்படும்.
வங்கியின் இந்த முடிவுக்கு ஓன்லைன் வங்கி சேவையின் வளர்ச்சி முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
2019-ஆம் ஆண்டிலிருந்து வங்கிக் கிளைகளில் நேரடியாக செய்யப்படும் நிதி பரிவர்த்தனைகள் 61% குறைந்துள்ளன, அதே சமயம் இணைய வங்கி பயன்பாடு அதிகரித்துள்ளது.
"ஒரு கிளையை மூடும் முடிவை எடுப்பது எப்போதும் கடினமானது. எப்போது, எங்கு மூடுவது என்பது குறித்துப் பல ஆய்வுகள் மேற்கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க முயல்கிறோம்," என வங்கி செய்தித் தொடர்பாளர் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |