அதிக தங்கம் கையிருப்பைக் கொண்ட உலகின் முதல் 10 இஸ்லாமிய நாடுகள்
அதிக தங்கம் கையிருப்பைக் கொண்ட உலகின் முதல் 10 இஸ்லாமிய நாடுகளின் பட்டியலில் இதோ!
ஒரு நாட்டின் தங்கம் கையிருப்பு (Gold Reserves) அதன் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முக்கியமானது.
சந்தை ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக நிலைத்து நிற்கவும், அத்தியாவசிய காலங்களில் நாட்டு பொருளாதாரத்தை உறுதியாக்கவும் தங்கம் கையிருப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
டிசம்பர் 2024 வரை உலகில் அதிக தங்கக் கையிருப்பு கொண்ட இஸ்லாமிய நாடுகள் பட்டியல் பின்வருமாறு:
- துருக்கி – 615 மெட்ரிக் டன்
- உஸ்பெகிஸ்தான் – 383 மெட்ரிக் டன்
- சவுதி அரேபியா – 323 மெட்ரிக் டன்
- கஸகஸ்தான் – 284 மெட்ரிக் டன்
- அல்ஜீரியா – 174 மெட்ரிக் டன்
- இராக் – 153 மெட்ரிக் டன்
- லிபியா – 147 மெட்ரிக் டன்
- எகிப்து – 127 மெட்ரிக் டன்
- கத்தார் – 111 மெட்ரிக் டன்
- குவைத் – 78.97 மெட்ரிக் டன்
இந்த பட்டியலில் துருக்கி முதலிடத்தில் உள்ளது. மத்திய ஆசியாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் தங்கக் கையிருப்பை அதிகரிக்கும் பொருளாதார உந்துதல் காணப்படுகிறது.
சவுதி அரேபியா, கத்தார், குவைத் போன்ற வளமான நாடுகளும் தங்கள் தங்கத்தை பாதுகாக்க கவனம் செலுத்தி வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |