Smart ஆகவுள்ள ATM Card
தற்போதைய உலகத்தில் பலரும் தொழிநுட்பத்திற்கு பழகி விட்டார்கள். தொலைபேசியை கையில் வைத்துக்கொண்டு பலவிதமானசெயற்பாடுகளை செய்து வருகின்றனர்.
அதிலும் வங்கிகளில் பண வைப்பு மற்றும் பண எடுப்பு போன்ற செயல்களுக்கு இலகுவாக ATM CARD பயன்படுத்தி வருகின்றார்கள்.
ATM CARD
இன்று நாம் பயன்படுத்தும் அட்டைகள் முதன்முதலில் 1950 களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், magnetic stripe அட்டைகள் 1970 களில் தோன்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எளிமையான சொற்களில் magnetic stripe மூலம் வாடிக்கையாளரைப் பற்றிய தகவல்களைச் சேமித்து, அதன் பயன்பாட்டின் போது அடையாளத்தை உறுதிப்படுத்தி பணத்தை கொடுக்கின்றது.
ஆரம்ப காலத்தில் வாடிக்கையாளரின் ID இல் தகவல் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டாலும், தற்போது ATM machine மூலம் Online database இல் தகவல்களை ஒப்பிட்டு பார்க்ககூடியதாக இருக்கின்றது.
நவீன முறை,
படிப்படியாக பயன்பாட்டுக்கு வந்த "cloning"களுக்குத் தீர்வாக, Bank Card printed information மற்றும் magnetic stripe உதவுகின்றது. மேலும் இந்த நவீன முறையானது modern bank card என்று அழைக்கப்பட்டது.
வங்கி அட்டையின் புத்திசாலித்தனம் அதோடு முடிந்துவிடவில்லை. இதற்கு சிறந்த உதாரணம் தற்காலத்தில் பயன்படுத்தப்படும் Contactless Cards அல்லது NFC திறன் கொண்ட Card.
Contactless Cards,
தொடர்பற்ற கட்டண முறைகள் என்பது credit cards, debit cards, key fobs, smart cards மற்றும் smartphones உள்ளிட்ட பிற சாதனங்கள் ஆகும்.
இவை பாதுகாப்பாக பணம் செலுத்துவதற்கு உதவியாக இருக்கும் ஒரு கருவியாகும்.
ஆகவே இதற்கு ATM Card யை பலரும் பயன்படுத்தி வருவதால், பலருக்கு நன்மைகள் ஏற்படுகின்றது. ஆகவே இந்த முறையை இன்னும் Update செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்து செய்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.