தமிழகத்தில் புதிய வகை கொரோனா! சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட முக்கிய தகவல்
தமிழகத்தில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா இருப்பது உறுதியானதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரித்தானியா நாடுகள் உருமாறிய புதுவகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்த பின்னர், உலக நாடுகள் பல இரு நாடுகளுக்கும் பயண தடை விதித்தது.
பல நாடுகள் பயணத்தடையை நீக்கினாலும், இரு நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.
அதேசமயம், பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு இந்தியா தடை விதிக்கவில்லை என்றாலும், கட்டாய சோதனை மற்றும் தனிமைப்படுத்தலை அறிவித்தது.
இந்நிலைியல் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பிரித்தானியாவிலிருந்து தமிழகம் திரும்பிய 17 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது, அதில் ஒருவருக்கு புதுவகை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதாக தெரிவித்துள்ளார்.
அதே சமயம் பிரித்தானியாவிலிருந்து இந்தியா வந்த 6 பேருக்கு புதுவகை கொரோனா இருப்பது உறுதியானதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த 3 பேர், ஐதராபத்தை சேர்ந்த 2 பேர், புனேவை சேர்ந்த ஒருவர் என ஆறு பேருக்கு புதிவகை கொரோனா உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.