ரஷ்யாவில் தயாராகும் ட்ரம்ப் மதுபானம்
ரஷ்யா நகரம் ஒன்றில் டொனால்ட் ட்ரம்ப் நினைவாக புதிய மதுபானத்தை தயாரிக்க நிறுவனம் ஒன்று விண்ணப்பித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவானதைத் தொடர்ந்து, தனது அமைச்சரவையில் மாற்றங்களை கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் ரஷ்யாவின் St. Petersburg நகரை தளமாகக் கொண்ட ஒரு தொழில்நுட்ப நிறுவனம், ட்ரம்பின் நினைவாக 'Trumpovka' என்ற புதிய வோட்கா மதுபான பிராண்டிற்காக, ரஷ்யாவில் வர்த்தக முத்திரை விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளது.
RAU IT சமர்ப்பித்த விண்ணப்பத்தில் ட்ரம்பின் நிழற்படத்தைக் கொண்ட ஒரு தனித்துவமான லேபிள் உள்ளது.
எனினும், Trumpovkaவை வெளியிடுவதற்கான உடனடி திட்டங்கள் எதுவும் இல்லை, ஆனால் ரஷ்ய சந்தையில் ட்ரம்பின் பெயரைப் பயன்படுத்தக்கூடிய போட்டியாளர்களிடம் இருந்து, பிராண்ட் பெயரைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று குறித்த நிறுவனம் கூறியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |