2023-னுடன் கைவிட வேண்டிய பழக்கங்கள் என்ன? சிறப்பு ஆலோசகர் வழங்கிய Tips
புத்தாண்டு இனிதாய் பிறந்துள்ளதை அடுத்து 2024ம் ஆண்டு கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களை சிறப்பு புத்துயிர்ப்பு ஆலோசகர் வழங்கியுள்ளார்.
புத்தாண்டு 2024
புத்தாண்டு என்பது புதிய தொடக்கம், நாம் நம்முடைய புதிய இலக்குகளை நம் எதிரே வைத்து வாழ்வில் முன்னேறி செல்லும் தருணம் இது.
பல இன்ப துன்பங்களை உள்ளடக்கிய 2023ம் ஆண்டு நிறைவடைந்து, 2024 என்னும் புதிய ஆண்டில் பிறந்து உள்ளதுடன், பல புதிய மாற்றங்களை இந்த ஆண்டு நம்முடைய வாழ்வில் முழு ஆற்றலுடன் எதிர்கொள்ளப் போகிறோம்.
புத்தாண்டில் நம்முடைய புதிய உந்துதலுக்கு கூடுதல் உதவியை தரும் வகையில் சில முக்கிய ஆலோசனைகளை சிறப்பு புத்துயிர்ப்பு ஆலோசகர் Maythal Eshaghian நமக்கு வழங்கியுள்ளார்.
2024ல் கடைபிடிக்க வேண்டியவை
பிறருடன் உங்களை எப்போது ஒப்பிட்டு பார்க்காதீர்கள், இந்த புதிய ஆண்டில் நாம் மிகவும் தன்னம்பிக்கையுடனும், நாம் யார் என்பதை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மோசமான சுய-குறை மதிப்பீடு செய்தல் மற்றும் பிறருடன் ஒப்பிட்டு பார்த்தல் என்பது நம்முடைய சுய தன்னம்பிகையை குறைக்கும், எனவே நம்முடைய திறமைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டியது கட்டாயம்.
பிறரை மகிழ்விக்க வேண்டும் என்பதை சற்று குறைத்துக் கொண்டு, முதலில் தன்னுடைய தேவைகளை முதன்மைப்படுத்த வேண்டும்.
அனைத்து நேரமும் செயல்திறனுடன் இருக்க வேண்டும் என்பது இல்லை, சில நேரங்களில் அனைத்தையும் நிறுத்தி வைத்து சிறிது இடைவெளி எடுப்பது மிகவும் நல்லது.
நம்முடைய மூளைக்கு அறிவுக்கு வேண்டாம் என தோன்றும் விஷயங்களுக்கு “சரி” என சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும், இது நம்முடைய உணர்வுகளுக்கு மரியாதை கொடுப்பதுடன் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
New year 2024, 2023, Happy New Year, New Beginning, therapist, life hacking tips, new life,