அம்மா, என்னை காப்பாற்றுங்கள் அம்மா: கதறியபடி எரிந்து சாம்பலான 9 வயது சிறுவன்! பதறவைக்கும் சம்பவம்
அமெரிக்காவில் சார்ஜ் செய்யப்பட எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து தீ பிடித்ததில், 9 வயது சிறுவன் எரிந்து சாம்பலான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில் புரூக்ளின் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
சம்பவத்தின்போது, Remi Miguel Gomez Hernandez எனும் 9 வயது சிறுவன் தனது பேஸ்மெண்ட் அறையில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது, திடீரென "அம்மா, என்னை காப்பாற்றுங்கள் அம்மா" என அழுகுரல் கேட்டுள்ளது. Gomez-ன் பெற்றோர் முழித்துக்கொண்ட பிறகு, அவரது அழுகுரல் நின்றது.
மகனின் அறையில் தீப்பிடித்திருப்பதை பார்த்த தந்தை, பலமுறை அறையினுள் செல்ல முயற்சித்துள்ளார். அனால், அவருக்கும் பலமான தீக்காயங்கள் ஏற்பட்டதே தவிர, அவரால் தீக்கு இறையாகிக்கொண்டிருக்கும் தனது மகனை காப்பாற்ற முடியவில்லை என பொலிஸார் கூறினர்.
சில நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்ததை அடுத்து, அதே வீட்டில் இருந்த மற்ற 13 பேரையும் முதலில் வெளியேற்றப்பட்டனர்.
இறுதியாக, சிறுவனை காப்பாறும் முயற்சில் ஈடுபட்டனர். அனால், Gomez இரத்த பிறகே மீட்கப்பட்டார். மேலும், 30 நிமிடங்கள் போராடி தீயானது முழுவதுமாக அணைக்கப்பட்டது.
14 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தில், 9 வயது சிறுவன் பலியான சம்பவம் குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
சமீபத்தில், நியூயோர்க்கில் எலக்ட்ரிக் பைக் பேட்டரியால் தீவிபத்து ஏற்பட்டது இது மூன்றாவது முறை என பொலிஸார் கூறினர்.

