நியூயார்க் நகரில் அரங்கேறிய துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்
New York City shooting incident 1 dead: நியூயார்க் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள குயின்ஸ் (Queens) பகுதியிலுள்ள ஒரு சலூன் கடைக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜங்ஷன் பவுல்வர்டு மற்றும் ரூஸ்வெல்ட் அவென்யூ ஆகியவற்றின் சந்திப்பில் உள்ள சலூன் கடைக்கு வெளியே இந்த துப்பாக்கிச் சூடானது உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியளவில் நடைபெற்றது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று ஆண்களுக்கு துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்தன. இதில் மார்பில் குண்டு பாய்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
படுகாயமடைந்த மற்ற இருவரில் ஒருவருக்கு தோள்பட்டை மற்றும் தொடையிலும், மற்றொருவருக்கு உடலின் நடுப்பகுதியிலும் குண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி, துப்பாக்கிச் சூடு தொடர்பாக 18 வயதுடைய ஒரு இளைஞரை கைது செய்து காவலில் எடுத்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.