கொரோனாவுக்கு நடுவில்... உச்சம் தொட்ட சம்பவம்: விழி பிதுங்கிய அமெரிக்க நகரம்
ஒட்டுமொத்த அமெரிக்காவில் மிகவும் பாதுகாப்பான நகரமாக கருதப்படும் நியூயார்க் நகரில் கொரோனா பாதிப்புகளுக்கு நடுவே கொலை குற்றங்களும் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நகரங்களில் மிகவும் பாதுகாப்பான நகரமாக நியூயார்க் கருதப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது கொரோனா பரவல் ஏற்பட்டதன் பின்னர் நியூயார்க் நகரை பாதுகாப்பான நகரமாக கருத முடியாது என்ற கருத்து வெளியாகியுள்ளது.
செவ்வாயன்று வெளியாக தகவலின் அடிப்படையில், இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து இதுவரை நியூயார்க் நகரில் 447 கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது கடந்த 2019 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 47 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி 2019 ஆம் ஆண்டை விட துப்பாக்கி குண்டுக்கு பலியானவர்கள் எண்ணிக்கையும் இருமடங்காக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் ஏற்பட்ட மன அழுத்தமே இந்த வன்முறை சம்பவங்களுக்கு பிரதான காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு கூறுகின்றனர்.