இளைஞருக்கு கொரோனா தடுப்பூசி அளித்ததற்காக பெண்ணைக் கைது செய்த பொலிசார்: காரணம் இதுதான்
அமெரிக்காவில் இளைஞர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி அளித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நியூயார்க்கில் 17 வயது இளைஞர் ஒருவர் தான் தடுப்பூசி பெற்றுகொண்டதாக தன் தாயிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவருக்கு தடுப்பூசி அளித்த பெண் தடுப்பூசி வழங்குவதற்கான தகுதி படைத்தவர் அல்ல. அத்துடன், அந்த இளைஞருக்கு 17 வயது என்பதால், தடுப்பூசி வழங்குபவர் அவரது பெற்றோரின் ஒப்புதலைப் பெற்றிருக்கவும் வேண்டும்.
ஆனால், Laura Parker Russo (54) என்ற நியூயார்க்கைச் சேர்ந்த அந்த பெண் மருத்துவ ரீதியில் தடுப்பூசி வழங்க தகுதி பெறவும் இல்லை, அந்த இளைஞரின் பெற்றோரிடம் ஒப்புதல் பெறவும் இல்லை.
ஆகவே, இது குறித்து அந்த இளைஞரின் தாயார் பொலிசாரிடம் புகாரளித்ததின் பேரில், Laura கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் இதுபோல் வயது வராதவர்களுக்கு அவர்களுடைய பெற்றோரின் ஒப்புதலின்றி கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவது குறித்து அடிக்கடி புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.