இந்த மருத்துவக்கல்லூரியில் படிக்க மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை; விவரம் செய்திக்குள்...
அமெரிக்காவிலுள்ள மருத்துவக்கல்லூரி ஒன்றில் படிக்க, இனி மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள Bronx என்னுமிடத்தில் அமைந்துள்ளது Albert Einstein medical school. இந்த பகுதி வறுமை மிகுந்த ஒரு இடமாகும்.
அப்படியிருக்கும் நிலையில், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இனி கல்விக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்னும் ஒரு அறிவிப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
Michael M. Santiago/Getty Images
அதைக் கேட்ட மாணவ மாணவியர் கைகளைத் தட்டியும் உற்சாகக் குரல் எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
காரணம் என்ன?
அதாவது, Albert Einstein மருத்துவக் கல்லூரிக்கு, கல்லூரி அறங்காவலர்கள் மற்றும் போர்டு உறுப்பினர்களின் தலைவரான Ruth L. Gottesman (93) என்பவர், சுமார் ஒரு பில்லியன் டொலர்கள் நன்கொடை வழங்கியுள்ளார்.
ஆகவே, தற்போது கல்லுரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவ மாணவியர் அடுத்த செமஸ்டருக்காக செலுத்திய கல்விக் கட்டணம் அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்பட உள்ளது.
அத்துடன், இனி இந்த மருத்துவக் கல்லூரியில் படிக்க இருக்கும் மாணவ மாணவியர் யாருக்கும் கல்விக் கட்டணம் கிடையாது. அமெரிக்க வரலாற்றிலேயே, ஒரு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்படும் மிகப்பெரிய நன்கொடை இது என்பது குறிப்பிடத்தக்கது
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |