நியூசிலாந்து வீரருக்கு கொரோனா உறுதி: சொந்த நாடு திரும்ப முடியாமல் அவதி
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் செய்பெர்டுக்கு கொரோனா உறுதியான சூழலில் சொந்த நாடு திரும்ப முடியாமல் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
போட்டிகள் நடைபெறவில்லை எனில் ரூ.2,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்த சூழலில், அணி வீரர்கள் நாட்டை விட்டு சொந்த நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
அந்தந்த அணி நிர்வாகமே வீரர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும் என்று பல நாடுகள் தெரிவித்து விட்டன.
இந்நிலையில், ஐ.பி.எல். போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து வீரர் டிம் செய்பெர்டுக்கு ஊருக்கு புறப்படுவதற்கு முன் பி.சி.ஆர். பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இவற்றில் 2 பரிசோதனைகளிலும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
இதனால் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்ற நியூசிலாந்தின் எஞ்சிய வீரர்கள், பணியாளர்கள் மற்றும் போட்டி வர்ணனையாளர்கள் ஆகியோருடன் சொந்த ஊருக்கு திரும்ப முடியாத சூழல் அவருக்கு ஏற்பட்டு உள்ளது.