சைக்கிள் பந்தயத்தில் எதிராளியை திடீரென தாக்கிய வீரர்: கமெராவில் பதிவான காட்சிகள்
நியூசிலாந்து சைக்கிள் பந்தய வீரர் ஒருவர் எதிராளியைத் தாக்கியதற்காக 25 நாட்கள் தடை விதிக்கப்பட்டார்.
சைக்கிள் பந்தயம்
நெதர்லாந்தில் கடந்த மார்ச் 7ஆம் அன்று, the Salverda Bouw Ster van Zwolle சைக்கிள் பந்தயம் நடந்தது.
பந்தயம் முடிய 33 கிலோ மீற்றர்கள் இருந்தபோது, நியூசிலாந்து வீரர் கியான் வாட்ஸ் மற்றும் டச்சு வீரர் மரிஜ்ன் மாஸ் இருவரும் முன்னணியில் இருந்தனர்.
அப்போது திடீரென வாட்ஸ் எதிராளியான மாஸை தாக்கினார். இதில் மாஸ் தனது சைக்கிளில் சற்று தடுமாறினாலும், நிலைதடுமாறாமல் இருந்ததால் காயமின்றி தப்பினார்.
அணியால் நீக்கம்
எனினும், வாட்ஸ் அவருடன் வாக்குவாதம் செய்ததும் கமெராவில் பதிவானது. இதனைத் தொடர்ந்து, அடுத்த நாள் நடந்த பந்தயத்தில் இருந்து வாட்ஸ் அவரது அணியால் நீக்கப்பட்டார்.
மேலும், சர்வதேச சைக்கிள் ஓட்டுநர் ஒன்றியத்தின் விசாரணையின் முடிவில் கியான் வாட்ஸிற்கு (Kiaan Watts) 25 நாட்கள் தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |