100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி: நொறுங்கிய வங்காளதேசம்
மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் நியூசிலாந்து அணி 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.
டிவைன், ஹாலிடே
கவுகாத்தியில் நேற்று நடந்த மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் ஆடி 227 ஓட்டங்கள் சேர்த்தது.
அபாரமாக ஆடிய சோபி டிவைன் 63 (85) ஓட்டங்களும், ப்ரூக் ஹாலிடே 69 (104) ஓட்டங்களும் விளாசினர். ரபேயா கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய வங்காளதேசம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பாஹிமா காதுன் நிதானமாக ஆட, ரபேயா கான் 25 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சுருண்ட வங்காளதேசம்
எனினும் ஏனைய வீராங்கனைகள் ஓட்டங்களை சேர்க்க தவறியதால், வங்காளதேசம் 127 ஓட்டங்களுக்கு சுருண்டது. கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்த பாஹிமா காதுன் 34 (80) ஓட்டங்கள் எடுத்தார்.
லியா தஹூஹூ மற்றும் ஜெஸ் கெர் தலா 3 விக்கெட்டுகளும், ரோஸ்மேரி மைர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றி நியூசிலாந்து 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் நியூசிலாந்து அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அடுத்ததாக இலங்கை அணியை 14ஆம் திகதி நியூசிலாந்து எதிர்கொள்ள உள்ளது.
𝐅𝐢𝐫𝐬𝐭 𝐰𝐢𝐧 𝐟𝐨𝐫 𝐍𝐞𝐰 𝐙𝐞𝐚𝐥𝐚𝐧𝐝! 🏏
— Female Cricket (@imfemalecricket) October 10, 2025
𝐍𝐞𝐰 𝐙𝐞𝐚𝐥𝐚𝐧𝐝: 𝟐𝟐𝟕/𝟗 (𝟓𝟎)
Brooke Halliday - 69 (104)
Sophie Devine - 63 (85)
Rabeya Khan - 3/30 (10)
𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡: 𝟏𝟐𝟕/𝟏𝟎 (𝟑𝟗.𝟓)
Fahima Khatun - 34 (80)
Rabeya Khan - 25 (39)
Jess Kerr - 3/21 (8)… pic.twitter.com/Db7JVyxoNK
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |