நியூசிலாந்தில் பெய்து வரும் தொடர் கனமழை: வெள்ள அவசர நிலை பிரகடனம்
நியூசிலாந்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 3 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்தில் கனமழை
நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன.
மேலும் ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ள அவசர நிலையை எதிர்த்து போராடினர்.
Strong flood in New Zealand - unbelievable pic.twitter.com/jDJ3hlACUd
— Ukraine ?? (@GoldUkraine) January 27, 2023
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூன்று பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போன ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அமைச்சர் கருத்து
கடுமையான வானிலையை நாட்டின் வடக்கு தீவில் திங்கட்கிழமை எதிர்பார்க்கலாம் என நியூசிலாந்தின் வானிலை சேவை தெரிவித்துள்ளது.
மேலும் இடியுடன் கூடிய கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
REUTERS
இந்நிலையில் நியூசிலாந்தின் வெள்ள அபாய நிலை குறித்து தெரிவித்த அமைச்சர் ஜேம்ஸ் ஷா, இந்த வெள்ள அபாயங்கள் உலகளாவிய காலநிலை மாற்றம் தொடர்பானவை என்று வலியுறுத்தினார்.