விசா கட்டணங்களை 60 சதவீதம் உயர்த்தியுள்ள தீவு நாடு!
நியூசிலாந்து அரசு, அனைத்து வகை விசா கட்டணங்களிலும் 60 சதவீதம் உயர்வை அறிவித்துள்ளது.
இந்த மாற்றம் அக்டோபர் 1 முதல் அமுலுக்கு வந்த்துள்ளது.
குறிப்பாக, வேலை, கல்வி மற்றும் சுற்றுலா விசாக்களை விண்ணப்பிக்கும் இந்திய விண்ணப்பதாரர்கள் மீது இது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த மாற்றம், குடியுரிமை அமைப்பை மக்களின் வரியிலிருந்து, விண்ணப்பதாரர்களின் கட்டணங்களால் சுயமாகப் பொறுப்பேற்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டது.
குடியேற்றத் துறை அமைச்சர் எரிக்கா ஸ்டான்ஃபோர்ட் இதன் முக்கியத்துவத்தை விளக்கினார். "குடியேற்ற முறைமையை திறமையாகவும் தற்காலிகமாகவும் மாற்றுவதே இதன் நோக்கம்," என்று அவர் கூறினார்.
இந்த மாற்றங்கள், மக்கள் நிதியின் சார்பை குறைத்து, நான்கு ஆண்டுகளில் $563 மில்லியனுக்கு மேல் சேமிப்பைக் கொண்டுவரும் என அவர் கூறினார்.
கல்வி விசா கட்டணம் $188 இருந்தது $300க்கு அதிகரிக்கிறது. சுற்றுலா விசா கட்டணங்கள் $119 இருந்து $188 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இருப்பினும் நியூசிலாந்தின் விசா கட்டணங்கள் இன்னும் அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் கட்டணங்களைவிட குறைவாகவே உள்ளதாக ஸ்டான்ஃபோர்ட் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான தகுதித் தேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், ஆங்கில மொழி திறன், வேலை அனுபவம் மற்றும் திறமைகளை அடிப்படையாகக் கொண்ட புதிதான வழிகாட்டுதல்களை உருவாக்கி, குடியேற்றத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
New Zealand government increases tourist, study visa fees by 60 percent, New Zealand increases visa fees