நியூசிலாந்தில் திடீர் மலைச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த சுற்றுலா பயணிகள்: பலர் மாயம்
நியூசிலாந்தில் ஏற்பட்ட திடீர் மலைச் சரிவில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளனர்.
நியூசிலாந்தில் மலைச்சரிவு
நியூசிலாந்தின் ஆக்லாந்தின் தென்கிழக்கே 230 கி.மீ தொலைவில் மவுங்கானுப் மலை அமைந்துள்ளது.
இங்குள்ள மவுவோ மலை அடிவாரப் பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவு தங்கும் பிரபலமான சுற்றுலா முகாமும் அமைந்துள்ளது.

இந்நிலையில் இப்பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக சுற்றுலா பயணிகள் தங்கியிருந்த கூடாரங்கள், வாகனங்கள் குளியலறைகள் ஆகியவற்றின் மீது பாறைகளும், மண்ணும் விழுந்து மூடின.
இந்த திடீர் எதிர்பாராத விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் அங்கு சுற்றுலா பயணிகளை மீட்கும் பணிகளை வேக வேகமாக முன்னெடுத்தனர்.
Aerial video shows landslide slamming into campsite in New Zealand pic.twitter.com/jxrRv85Nhz
— New York Post (@nypost) January 22, 2026
சிலர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கி மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்பு பணியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்ததே இந்த நிலச்சரிவு ஏற்பட்ட காரணமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |