நியூசிலாந்தில் தடுப்பூசி போட்ட இளைஞர் இதயப் பிரச்சனையால் மரணம்! எந்த நிறுவனம் தயாரித்தது?
நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசி போட்ட இளைஞர் ஒருவர் பக்க விளைவால் மரணமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் இரண்டாவது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா தடுப்பூசி போட்ட பெண், அரிதான பக்க விளைவால் உயிரிழந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.
ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்ட 26 வயதான இளைஞர் இரண்டு வாரங்களுக்குள் myocarditis பாதிப்பால் உயிரிழந்ததாக நியூசிலாந்து அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
myocarditis பாதிப்பால் இறந்த நபர், அவரது அறிகுறிகளுக்கு மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சையை பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
myocarditis என்பது இதய தசையின் வீக்கம் ஆகும், இது இரத்தத்தை பம்ப் செய்யும் உறுப்புகளின் திறனைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் இதயத் துடிப்பு தாளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
ஃபைசர் தடுப்பூசி, அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் ஜேர்மனியின் பயோஎன்டெக் நிறுவனம் இணைந்து தயாரித்தது.
நியூசிலாந்தில் ஏற்பட்டுள்ள இறப்பு குறித்து தாங்கள் அறிந்திருப்பதாகவும், அனைத்து தரவுகளையும் கண்காணித்து வருவதாக ஃபைசர் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.