இலங்கையர் நடத்திய தீவிரவாத தாக்குதல் எதிரொலி.. நியூசிலாந்தில் புதிய சட்டம் நிறைவேற்றம்!
தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிடுவதை சட்டவிரோதமாக்கும் புதிய பாதுகாப்புச் சட்டத்தை நியூசிலாந்து நிறைவேற்றியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் அதாவது செப்டம்பர் 3ம் திகதி நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருக்கும் Countdown Lynnmall சூப்பர் மார்க்கெட்டில் இலங்கையர் கத்தி குத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் சமப்வ இடத்திலே சுட்டுக் கொன்றனர். இத்தாக்குதலின் மூலம் நியூசிலாந்தின் பாதுகாப்புச் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் அம்பலமானது.
எனினும், விரைவில் கடுமையான புதிய பாதுகாப்பு சட்டம் அமுல்படுத்துப்படும் என நாட்டின் பிரதமர் Jacinda Ardern உறுதியளித்தார்.
இந்நிலையில், இன்று செப்டம்பர் 30ம் திகதி வியாழக்கிழமை, புதிய பாதுகாப்புச் சட்டத்தை நியூசிலாந்து நிறைவேற்றியுள்ளது.
புதிய சட்டத்தின் படி, நியூசிலாந்தில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
இச்டசட்டம் பயங்கரவாத செயல்களைத் திட்டமிடுதல் மற்றும் தயாராவதை தடுக்கும் நடவடிக்கைக்காக எந்தவித வாரண்டும் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் நுழைய, சோதனை செய்ய மற்றும் யாரையும் கண்காணிக்க காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கிறது.
மேலும், பயங்கரவாத நோக்கங்களுக்காக ஆயுதங்கள் அல்லது போர் பயிற்சியில் ஈடுபடுவதை சட்டவிரோதமாக்குகிறது.
நியூசிலாந்தின் நீதி அமைச்சர் Kris Faafoi, யபயங்கரவாதத்தின் தன்மை மாறிவிட்டது. பயங்கரவாதத்தின் தன்மை மாறிவிட்டது. உலகெங்கிலும் தீவிரவாத குழுக்களை விட தனி நபர்கள் தான் அதிகம் உள்ளனர் என கூறினார்.