சுய-தனிமைப்படுத்தலில் பிரபல நாட்டின் பிரதமர்! என்ன நடந்தது? அரசாங்கம் வெளியிட்ட தகவல்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்ததை தொடர்ந்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் சுய-தனிமைப்படுத்தலில் இருக்கிறார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்த பின்னர், ஆர்டெர்ன் செவ்வாய்கிழமை வரை சுயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஜனவரி 22 அன்று கெரிகேரி நகரத்திலிருந்து ஆக்லாந்திற்கு மேற்கொண்ட விமான பயணத்தின் போது, கொரோனா பாதித்த நபருடன் ஆர்டெர்ன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
முழு பரிசோதனை முடிவு மறுநாள் எதிர்பார்க்கப்படுகிறது. அதில், அந்த நபருக்கு கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாட்டால் தொற்று ஏற்பட்டதா என்பதை தெரியவரும்.
அறிகுறியற்ற ஆர்டெர்ன், நன்றாக இருக்கிறார், அவருக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்படும் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் உத்தரவுகளுக்கு இணங்க தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
விமானத்தில் இருந்த கவர்னர் ஜெனரல் மற்றும் அவரது ஊழியர்களின் உறுப்பினர்களும் அதே தனிமைப்படுத்தும் நடைமுறையை பின்பற்றுகின்றனர் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.