16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை: நியூசிலாந்து அரசு முடிவு
New Zealand proposes age limit for social media: 16 வயதுக்கு உட்பட்டோருக்கு கடுமையான சமூக ஊடக தடைகளை விதிக்கும் நடைமுறையை நியூசிலாந்து முன்னெடுத்துள்ளது.
சமூக ஊடக தடை
16 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் டிஜிட்டல் நல்வாழ்வை பாதுகாக்கும் நோக்கில் சமூக ஊடக பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் புதிய சட்ட நடவடிக்கையை நியூசிலாந்து அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
அவுஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளின் இத்தகைய நடவடிக்கையை தொடர்ந்து நியூசிலாந்தும் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான சமூக ஊடக தடை நடவடிக்கையில் இணைந்துள்ளது.

நியூசிலாந்து அரசு முன்மொழிந்துள்ள இந்த ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவின் கீழ், டிக் டாக்(TikTok), இன்ஸ்டாகிராம்(Instagram), ஸ்னாப்சாட்(Snapchat), மற்றும் பேஸ்புக்(Facebook), ஆகிய சமூக ஊடக தளங்கள் கடுமையான தடைகளை எதிர்கொள்கின்றன.
முக்கிய அம்சங்கள்
16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தடுப்பதற்காக டிஜிட்டல் ஐடி, முக வயது மதிப்பீடு ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்./// இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் தங்களது ஒட்டுமொத்த வருவாயில் 10% வரை அபராதமாக செலுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்கும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்து அவற்றை குறைக்கும் நடவடிக்கையில் நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்பது போன்றவை சட்டப்பூர்வ கடமையாக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையானது குடும்பங்களை குறிவைக்காமல் சம்பந்தப்பட்ட நிறுவனங்களையே இலக்காக கொண்டு இருப்பதாக நியூசிலாந்து நாட்டின் கல்வி அமைச்சர் எரிகா ஸ்டான்போர்ட் தெளிவுபடுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |