உக்ரைனுக்கு உதவ பிரித்தானியாவுக்கு ஆயுதம் வாங்க நிதி அளிக்கும் நியூசிலாந்து!
உக்ரைனுக்கு உதவ ஆயுதங்களை வாங்க பிரித்தானியாவுக்கு நிதி அளிப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு உதவுவதற்காக ஐரோப்பாவுக்கு ராணுவ போக்குவரத்து விமானத்துடன் 50 வீரர்களையும் அனுப்பி வைப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.
அத்துடன் வெடிமருந்துகள், ஆயுதங்களை வாங்க பிரித்தானியாவுக்கு 7.5 மில்லியன் டொலர்கள் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, 'நியூசிலாந்து அனுப்பும் C130 ஹெர்குலிஸ் விமானம் முக்கிய விநியோக மையங்களுக்கு மிகவும் தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல ஐரோப்பா முழுவதும் பயணிக்கும். ஆனால் அந்த விமானம் நேரடியாக உக்ரைனுக்கு செல்லாது.
பெரும்பாலான இராணுவ உபகரணங்கள் தரை வழியாக நாட்டிற்கு கொண்டு செல்லப்படும். மேலும் கூடுதலாக 13 மில்லியன் நியூசிலாந்து டொலர்களை ராணுவம் மற்றும் மனித உரிமை வளர்ச்சிக்காக நியூசிலாந்து அளிக்கிறது.
போருக்காக மொத்தம் 20 மில்லியன் டொலர்களை பங்களிப்பாக அளிக்க 67 பேரை பணியர்த்தியுள்ளோம்' என தெரிவித்தார்.