42 ஆண்டுகளுக்கு பின் White Wash! சரித்திரம் படைத்த சான்ட்னர் படை
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்று நியூசிலாந்து சாதனை படைத்தது.
ஜேமி ஓவர்டன் 68 ஓட்டங்கள்
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வெலிங்டனில் நடந்தது. 
முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 222 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஜேமி ஓவர்டன் (Jamie Overton) 62 பந்துகளில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் குவித்தார்.
பிளேயர் திக்னர் 4 விக்கெட்டுகளும், ஜேக்கப் டுஃபி 3 விக்கெட்டுகளும், ஃபௌக்ஸ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
ஒயிட் வாஷ்
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 44.4 ஓவர்களில் 226 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரச்சின் ரவீந்திரா 46 (37) ஓட்டங்களும், டேர்ல் மிட்சேல் 44 (68) ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.
42 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்து, மிட்சேல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி சாதனை படைத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |